பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - 2வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்ப்பு


பாகிஸ்தானுக்கு  எதிரான டெஸ்ட் - 2வது நாள்  முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்ப்பு
x

ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்

முல்தான்,

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் ஜோடி களமிறங்கியது. சாக் கிராலி 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் . இதனையடுத்து ஓலி போப் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 49 பந்தில் 63 ரன்கள் எடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அப்ரார் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் பாபர் ஆசம் 75 ரன்னும், ஷாகில் 63 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.

பென் டக்கெட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இதுவரை 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Related Tags :
Next Story