வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
x

Image Courtesy: @ICC

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் விலகி உள்ளார்.

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. தொடரின் இரண்டு போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட போதே அமீர் ஜமால் உடற்தகுதியை பொறுத்தே அணியில் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டெஸ்ட் தொடருக்கு முன் அவர் உடற்தகுதியை எட்டாததால் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த கம்ரன் குலாம் மற்றும் அப்ரர் அகமது ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story