வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x

image courtesy; AFP

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும்.

இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியிலும் (ஆகஸ்ட் 21 முதல் 25 வரை), 2வது டெஸ்ட் போட்டி கராச்சியிலும் (ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை) நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், சவுத் ஷகீல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமீர் ஜமால் உடற்தகுதியை பொறுத்து அணியில் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம்:

ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), அப்துல்லா ஷாபீக், அப்ரார் அகமது, பாபர் அசாம், கம்ரான் குலாம், குர்ரம் ஷஷாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹூரைரா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சர்ப்ராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), நஷீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆஹா, ஷாகின் ஷா அப்ரிடி, அமீர் ஜமால் (உடற்தகுதியை பொறுத்து).


Next Story