உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி
x

கோப்புப்படம் 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை வசப்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை வசப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா அணி 13 டெஸ்ட்களில் 9 வெற்றி ஒரு தோல்வி, 3 டிராக்களுடன் 120 புள்ளிகளுடன் 76.92% என்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.

இந்திய அணி வங்கதேசத்தை வென்றதன் மூலம் 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என 87 புள்ளிகளுடன் 55.77% எடுத்து 2-ம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா 54.55%, இலங்கை 53.33% 4-ம் இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Next Story