இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம்


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம்
x

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் இங்கிலாந்தின் இன்னிங்சை அதிரடியாக தொடங்கினர். . இதனால் இருவரும் எளிதாக ரன் வேட்டை நடத்தினர். 13.4 ஓவர்களில் அணி 100 ரன்களை கடந்தது. ரன்ரேட் 6-க்கும் குறையாமல் நகர்ந்தது. கிராவ்லி தனது 3-வது சதத்தையும், டக்கெட் தனது முதலாவது சர்வதேச சதத்தையும் அடித்தனர்.

ஸ்கோர் 233 ஆக உயர்ந்த போது டக்கெட் 107 ரன்களில் (110 பந்து, 15 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். கிராவ்லி 122 ரன்களில் (111 பந்து, 21 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (23 ரன்) மட்டும் நிலைக்கவில்லை. மற்றபடி விக்கெட் கீப்பர் ஆலி போப்பும், ஹாரி புரூக்கும் தங்களது கைவரிசையை காட்டி மேலும் வலுவூட்டினர். 3-வது சதத்தை அடித்த போப் 108 ரன்களில் (104 பந்து, 14 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். புதுமுக சுழற்பந்து வீச்சாளர் சாத் ஷகீலின் ஒரே ஓவரில் 6 பவுண்டரி சாத்திய ஹாரி புரூக்கும் மூன்று இலக்கத்தை தொட்டார். 80 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்த புரூக், இங்கிலாந்து வீரர்களில் மின்னல் வேகத்தில் சதம் விளாசிய 3-வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்தார். போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 506 ரன்கள் குவித்தது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி ;விக்கெட்டுகளை. இழந்தது.ஹாரி ப்ரூக் 153 ரன்களும்,. லிவிங்ஸ்டன் 9 ரன்,கேப்டன் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் ,வில் ஜாக்ஸ் 30 ரன்களும், ஆலி ராபின்சன் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் சாஹித் அகமது 4 விக்கெட்டும் ,நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்க்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

இருவருமே அரைசதம் அடித்து ,சதத்தை நெருங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்துள்ளது.அப்துல்லா ஷாபிக் 89 ரன்களுடனும், இமாம் உல் ஹக் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Related Tags :
Next Story