டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்


டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
x

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஹோபர்ட்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் களமிறங்கினர். இதில் மேயர்ஸ் 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், சார்லஸ் சற்று நிலைத்து நின்று ஆடினார்.

மறுபுறத்தில் லூயிஸ்(15), நிக்கோலஸ் பூரன்(7) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அரைசதத்தை நோக்கி முன்னேறிய சார்லஸ் 45 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரோவ்மான் போவெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி சூப்பர்12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழக்க வேண்டியிருக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்போடு தீவிரமாக விளையாடி வருகின்றன.


Next Story