டி20 உலகக்கோப்பை: நமீபியா அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி


டி20 உலகக்கோப்பை: நமீபியா அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி
x

ஸ்காட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்ததுதொடக்கத்தில் ஜேபி கோட்ஸே ரன் எதுவும் எடுக்காமலும் , ஜான் ப்ரைலின்க் 12 ரன்களிலும் , நிகோலாஸ் டேவின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து வந்த கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் நிலைத்து விளையாடினார். பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய அவர் அரைசதமடித்து 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜேன் கிரீன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இறுதியில் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது.

தொடக்கத்தில் ஜார்ஜ் முன்சி 7 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 26 ரன்களும் , பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்; பின்னர் ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் ஸ்காட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்களும் , மைக்கேல் லீஸ்க் 35 ரன்களும் எடுத்தனர்.


Next Story