டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு


டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கயானா ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடக்கும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நியூசிலாந்து :

பின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன்.

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மாதுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், கரீம் ஜனத், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.


Next Story