டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா


டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா
x

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்று அசத்தியுள்ளன.

ஆண்டிகுவா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் (இந்திய நேரப்படி நாளை) முடிவடைய உள்ளன. இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கான சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தன.

இந்த பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முன்னேறியுள்ளது. அதேவேளை இங்கிலாந்து 2 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 2-வது இடம்பெற்று முன்னேறியுள்ளது.

ஒரு வெற்றி மட்டுமே பெற்ற முன்னாள் சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது. முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா, சூப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியுள்ளது.


Next Story