டி20 கிரிக்கெட்: சாதனை பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 4-வது இடம் பிடித்த இந்தியா


டி20 கிரிக்கெட்: சாதனை பட்டியலில்  பாகிஸ்தானை முந்தி 4-வது இடம் பிடித்த இந்தியா
x

image courtesy: twitter/@BCCI

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களும், கில் 39 பந்துகளில் 58 ரன்களும் குவித்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150+ ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்த அணிகளின் மாபெரும் சாதனை பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டியல்:-

1. பாகிஸ்தான் - 200 ரன்கள் ( எதிரணி: இங்கிலாந்து)

2. நியூசிலாந்து - 169 ரன்கள் (எதிரணி: பாகிஸ்தான்)

3. இங்கிலாந்து - 169 ரன்கள் ( எதிரணி: இந்தியா)

4. இந்தியா - 153 ரன்கள் (எதிரணி: ஜிம்பாப்வே)

5.பாகிஸ்தான் - 152 ரன்கள் (எதிரணி: இந்தியா)


Next Story