தென்ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்


தென்ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
x

தென்ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் தொடங்கியது.

டர்பன்,

எஸ்.ஏ.20 எனப்படும் தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. டோனோவன் பெரீரா 82 ரன்கள் (40 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 39 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய டர்பன் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் குயின்டான் டி காக் 78 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட டோனோவன் பெரீரா ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.50 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story