எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடற்தகுதி நிறைய குறைந்துவிட்டது - பாக். துணை கேப்டன்


எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடற்தகுதி நிறைய குறைந்துவிட்டது - பாக். துணை கேப்டன்
x

image courtesy: @TheRealPCB

கடந்த இரண்டு மாதங்களில் எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடற்தகுதி நிறைய குறைந்துவிட்டது என சவுத் சகீல் கூறியுள்ளார்.

கராச்சி,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி வரும் 30ம் தேதி கராச்சியிலும் தொடங்க உள்ளது.

இதையடுத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், சவுத் சகீல் துணை கேப்டனாகவும் நியமிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடற்தகுதி நிறைய குறைந்துவிட்டது என பாகிஸ்தான் துணை கேப்டன் சவுத் சகீல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையைச் சொல்வது என்றால் கடந்த இரண்டு மாதங்களில் எங்களுடைய வீரர்களில் சிலருக்கு உடல் தகுதி நிறைய குறைந்துவிட்டது. அவர்களுமே இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நாங்கள் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் எதிர்காலத்தில் நாங்கள் உடல் தகுதியில் மிகச் சிறப்பாக வருவோம்.

நான் எப்பொழுதும் கேப்டன் பொறுப்பை அனுபவித்து செய்திருக்கிறேன். தற்பொழுது பாகிஸ்தான் தேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் ரன்கள் அடித்தாலும் அது அணியில் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நினைக்கக் கூடியவன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story