இலங்கைக்கு எதிரான தொடர்... அந்த வீரரை தேர்வு செய்யாதது ஏன்..? - ஆகாஷ் சோப்ரா கேள்வி


இலங்கைக்கு எதிரான தொடர்... அந்த வீரரை தேர்வு செய்யாதது ஏன்..? - ஆகாஷ் சோப்ரா கேள்வி
x

கோப்புப்படம்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புதுடெல்லி,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்த்து. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த டி20 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த போது அந்த உலகக் கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரராக அவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவேஷ் கான் தேர்வு செய்யப்படவில்லை.

சீனியர் வீரர்கள் இடம் பெறாத இலங்கை தொடரில் டி20 உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இருந்த அவேஷ் கான் தான் இடம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் தற்போது அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஏன்? என தெரியவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக அவேஷ் கான் இருந்தார். ஆனால் அதன் பிறகு இந்திய அணி விளையாடிய டி20 தொடரில் அவர் இல்லை. அவர் தற்பொழுது எங்கே போனார்?. நீங்கள் அவர் மீது முதலீடு செய்ய நினைத்திருந்தால், அடுத்தடுத்த தொடர்களில் நீங்கள் அவருக்குத்தான் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு அடுத்து அவருக்கு விளையாட வாய்ப்புகள் தரப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். டி20 கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிபரம் நன்றாக இல்லை. ஆனாலும் அவர் மீது நான் முதலீடு செய்ய விரும்புகிறேன்.

பிரசித் கிருஷ்ணா உயர் மட்ட கிரிக்கெட்டில் சிறந்த திறன்களை கொண்டிருக்கும் வீரராக இருக்கிறார். எனவே அவர் மீது இப்போது இருந்து முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அதே சமயத்தில் அவேஷ் கானுக்கும் ஒரு தெளிவான பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story