பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - காரணம் என்ன..?


பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - காரணம் என்ன..?
x

கோப்புப்படம்

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியிலும், 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி கராச்சியிலும் தொடங்குகிறது.

இந்நிலையில் கராச்சியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story