யாராலும் தடுக்க முடியாது.. பெங்களூருவுடன் அந்த அணிதான் இறுதிப்போட்டியில் மோதும் - ஹர்பஜன்


யாராலும் தடுக்க முடியாது.. பெங்களூருவுடன் அந்த அணிதான் இறுதிப்போட்டியில் மோதும் - ஹர்பஜன்
x

பெங்களூரு அணி இதேபோல பிளே ஆப் சுற்றில் விளையாடும் பட்சத்தில் கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் பெங்களூரு அணி தனது முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறியது.

அதன்பின் எழுச்சி பெற்ற அந்த அணி தனது கடைசி 6 லீக் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் மாபெரும் எழுச்சி கண்டுள்ள பெங்களூரு அணி இதேபோல பிளே ஆப் சுற்றில் விளையாடும் பட்சத்தில் கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் கவுதம் கம்பீர் ஆலோசகராக இருக்கும் கொல்கத்தா அணியை மாபெரும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி எதிர்கொள்ளும் என்றும் ஹர்பஜன் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று நான் கருதுகிறேன். அது நடந்தால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வார்கள். இங்கிருந்து இதேபோல ஒவ்வொரு போட்டியிலும் கடினமாக போராடினால் கண்டிப்பாக பெங்களூரு கோப்பையை வெல்லும். இதே போன்ற ஆற்றலுடன் விளையாடினால் அவர்களை மற்ற அணிகள் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்" என்று கூறினார்.


Next Story