நியூசிலாந்து-வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் 'சமன்' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?


நியூசிலாந்து-வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் சமன் - டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?
x

Image Courtesy : ICC Twitter

தினத்தந்தி 10 Dec 2023 8:28 AM GMT (Updated: 18 Dec 2023 4:59 AM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

துபாய்,

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 1 போட்டி டிரா ஆனது. அதன் பின்னர் இந்திய அணி தற்போது வரை எந்த டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை.

இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் அணி (100%) முதல் இடத்திலும், இந்தியா (66.67%) 2ம் இடத்திலும், நியூசிலாந்து (50%) 3ம் இடத்திலும், வங்காளதேசம் (50%) 4ம் இடத்திலும், ஆஸ்திரேலியா (30%) 5ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 6ம் இடத்திலும், இங்கிலாந்து (15%) 7ம் இடத்திலும், இலங்கை (0%) 8ம் இடத்திலும் உள்ளன.

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story