மெக்முல்லன் அதிரடி அரைசதம்; ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவிப்பு


மெக்முல்லன் அதிரடி அரைசதம்; ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @CricketScotland

ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார்.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜோன்ஸ் 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பிரெண்டன் மெக்முல்லன் களம் இறங்கினார்.

ஜார்ஜ் முன்சே - மெக்முல்லன் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜார்ஜ் முன்சே 35 ரன்னிலும், மெக்முல்லன் 34 பந்தில் 60 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து ரிச்சி பெர்ரிங்டன் மற்றும் மேத்யூ கிராஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் மேத்யூ கிராஸ் 18 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய லீஸ்க் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆட உள்ளது.


Next Story