லைவ் அப்டேட் டெஸ்ட் - 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்னும் குவித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 151 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கி உள்ளது.
Live Updates
- 9 Jun 2023 2:43 PM GMT
முதல் பந்தை நோ பாலாக வீசினார் முகமது ஷமி
தேநீர் இடைவேளைக்கு பின் வீசிய முதல் பந்தை நோ பாலாக வீசினார் முகமது ஷமி
- 9 Jun 2023 2:14 PM GMT
ஆஸ்திரேலியா 11 ஓவரில் 23/1
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 11 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை மொத்தமாக 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
- 9 Jun 2023 1:59 PM GMT
ஓவல் மைதானத்தில் புதிய சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்..!
ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 50+ ஸ்கோர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார் தாக்கூர். இருவரும் 3 முறை 50+ ஸ்கோர்கள் அடித்துள்ளனர்.
- 9 Jun 2023 1:32 PM GMT
வார்னர் 1 ரன்னில் அவுட்
வார்னர் 8 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
- 9 Jun 2023 1:19 PM GMT
முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்த ஷமி...!
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்-முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்த ஷமி...!
- 9 Jun 2023 1:05 PM GMT
இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்
இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்....ஆஸி. 173 ரன்கள் முன்னிலை..!
- 9 Jun 2023 12:56 PM GMT
ஷர்துல் தாக்கூர் 51 ரன்னில் அவுட் ஆனார்.
பொறுமையாக ஆடி வந்த ஷர்துல் தாக்கூர் 109 பந்தில் 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
- 9 Jun 2023 12:51 PM GMT
ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்தார்
ஷர்துல் தாக்கூர் 108 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார்.