இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்:  முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்துள்ளது.

கராச்சி,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடந்த தொடக்க டெஸ்டில் 74 ரன் வித்தியாசத்திலும், முல்தானில் நடந்த 2-வது டெஸ்டில் 26 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்த்த்து

அதன்படி முதலில் பேட்டிங் செய்த் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாபிக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷான் மசூத் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் சிறப்பாக விளையாடிய அசார் அலி 45 ரன்களில் வெளியேறினார்.அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.அவர் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய பாபர்அசாம் 78 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் வந்த அகா சல்மான் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார்.அவர் 56 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 79 ஓவர்களுக்கு 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து அணி சார்பில் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்துள்ளது.


Related Tags :
Next Story