கடைசி டி20 போட்டி: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து...!


கடைசி டி20 போட்டி: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து...!
x

Image Courtesy: @BLACKCAPS

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் யுஏஇ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி களம் இறங்கியது.

யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆர்யான்ஷ் சர்மா 16 ரன், முகமது வாசிம் 8 ரன், அடுத்து களம் இறங்கிய அரவிந்த் 12 ரன், ஆசிப் கான் 11 ரன், அன்ஷ் டாண்டன் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் யுஏஇ அணி 53 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே எடுத்தது. யுஏஇ தரப்பில் அப்சல் கான் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 32 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.


Next Story