தீவிர பயிற்சியில் கே.எல்.ராகுல்... வீடியோ


தீவிர பயிற்சியில் கே.எல்.ராகுல்... வீடியோ
x
தினத்தந்தி 2 Aug 2023 2:47 PM GMT (Updated: 2 Aug 2023 2:50 PM GMT)

கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களிலும் விளையாடவில்லை.

பெங்களூரு,

இந்திய அணியின் அதிரடி வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களிலும் விளையாடவில்லை.

நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் கே.எல்.ராகுல் .முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த ராகுல், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பும்ரா உடற்தகுதியுடன் திரும்பிய நிலையில் கேஎல் ராகுலும் திரும்பினால் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும்.


Next Story