ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி  ஹாட்ரிக் வெற்றி
x

Image courtesy: icc twitter 

சூப்பர் சிக்சின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.

புளோம்பாண்டீன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

புளோம்பாண்டீனில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது. அர்ஷின் குல்கர்னி 108 ரன்களும், முஷீர் கான் 73 ரன்களும் அடித்தனர். பின்னர் தனது 2-வது இன்னிங்ஸை ஆடிய அமெரிக்க அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 125 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் இந்தியா 201 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்ற இந்திய அணி ஏற்கனவே சூப்பர்சிக்ஸ் சுற்றை எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிக்சின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.


Next Story