டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி கனடா அபார வெற்றி


டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி கனடா அபார வெற்றி
x

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தி கனடா அபார வெற்றி பெற்றது

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - கனடா மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து,

கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்நீத் தலிவால் 6 ரன்னிலும், ஆரோன் ஜான்சன் 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய பர்கத் சிங் 18 ரன்னிலும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

நிக்கோலஸ் கிர்டன் 49 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தில்லன் ஹெய்லிகர் 0 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் கனடா 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் கிரேக் யங், பேரி மெக்கர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து தொடக்க வீரர்களாக ஆண்டிரூ மற்றும் கேப்டன் பால் ஸ்டார்லிங் களமிறங்கினர். கேப்டன் பால் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆண்டிரூ 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த டக்கர் 10 ரன்னிலும், ஹெரி 7 ரன்னிலும், கேம்ஹர் 4 ரன்னிலும், ஹரித் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கனடா அபார வெற்றிபெற்றது.


Next Story