ஐசிசி-யின் பிரத்யேக திட்டத்தில் இணையும் ஐபிஎல் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு


ஐசிசி-யின் பிரத்யேக திட்டத்தில் இணையும் ஐபிஎல் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு
x

Image Courtesy : IPL

தினத்தந்தி 16 Jun 2022 12:59 PM GMT (Updated: 16 Jun 2022 1:04 PM GMT)

ஐசிசி-யின் "ப்யூச்சர் டூர் ப்ரோகிராம்"-யில் ஐபிஎல் இணையவுள்ளது

மும்பை,

ஐசிசி-யின் "ப்யூச்சர் டூர் ப்ரோகிராம்"-யில் ஐபிஎல் தொடர் இணைய இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்து உள்ளார். ஐசிசி-யின் அடுத்த காலாண்டிற்கான "ப்யூச்சர் டூர் ப்ரோகிராம்"-யில் ஐபிஎல் இணையும் என ஜெய் ஷா தெரிவித்து உள்ளார்.

இந்தப் பட்டியலில் ஐபிஎல்-ஐ இணைத்திருப்பதன் மூலம் ஐபிஎல் தொடர் நடைபெறும் காலத்தில் வேற எந்த சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடத்தப்படாது. ஐபிஎல் தொடரில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள் தொடரின் நடுவே தங்களது தேசிய அணிக்காக விளையாடச் செல்வார்கள்.

இதனால் ஐபிஎல் தொடருக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கவே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் தொடருக்காக சர்வதேச போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமாகுமா என விளையாட்டு நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Related Tags :
Next Story