ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள்: தோனியை முந்திய விராட் கோலி


ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள்: தோனியை முந்திய விராட் கோலி
x

விராட் கோலி 241 சிக்சர்கள் அடித்துள்ளார்

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடி விராட் கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்தன் மூலம் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் தோனியை முந்தினார்.விராட் கோலி 232 இன்னிங்சில் 241 சிக்சர்கள் அடித்துள்ளார். டோனி 218 இன்னிங்சில் 239 சிக்சர்கள் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 261 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி, தோனி 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.


Next Story