சாதனை பட்டியல்களில் இணைந்த இந்திய இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால்


சாதனை பட்டியல்களில் இணைந்த இந்திய இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால்
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 2 Feb 2024 12:44 PM GMT (Updated: 3 Feb 2024 10:15 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்து அசத்தினார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக இளம் நட்சத்திர வீரர் 179 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

இதன்மூலம் இவர் 2 சாதனை பட்டியல்களில் இணைந்துள்ளார். அவைகள்

1.ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா தரப்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. சேவாக் - 228 ரன்கள்

2.சேவாக் - 195 ரன்கள்

3. வாசிம் ஜாபர்-192 ரன்கள்

4.தவான் - 190 ரன்கள்

5. சேவாக் - 180 ரன்கள்

6.ஜெய்ஸ்வால் - 179 ரன்கள்

2. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை சுனில் கவாஸ்கருடன் பகிர்ந்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. கருண் நாயர் - 232 ரன்கள்

2. சுனில் கவாஸ்கர் - 179 ரன்கள்

2. ஜெய்ஸ்வால் - 179 ரன்கள்

3. முகமது அசாரூதின் - 175 ரன்கள்


Next Story