இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றம்: பி.சி.சி.ஐ அறிவிப்பு


இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றம்: பி.சி.சி.ஐ அறிவிப்பு
x

Image Courtesy: AFP 

இந்தியா - வங்காளதேசம், இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் (சென்னை மற்றும் கான்பூர் மைதானங்களில்) அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது முதல் டி20 போட்டி குவாலியரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி (ஜனவரி 22, 2025) முதலில் சென்னையில் நடைபெறுவதாகவும், 2 வது போட்டி (ஜனவரி 25, 2025) கொல்கத்தாவிலும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2வது போட்டி சென்னையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story