ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி


ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி
x

கோப்புப்படம் 

ஒருநாள் போட்டி தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டு உள்ளது.

துபாய்,

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் 2-வது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது. செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எதிர்கொள்வதால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.


Next Story