உலகக்கோப்பை தொடருக்கான சின்னங்களை அறிமுகம் செய்தது ஐசிசி ...!


உலகக்கோப்பை தொடருக்கான சின்னங்களை அறிமுகம் செய்தது ஐசிசி ...!
x

உலகக்கோப்பை தொடருக்கான ஆண், பெண் சின்னங்களை ஐசிசி அறிமுகம் செய்தது.

இந்தியாவில் வரும் 5 -ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான சின்னங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அரியானா மாநிலத்தின் குருகிராமில் நடந்த விழாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை யு- 19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யாஷ் துல் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் வெளியிட்டனர். இந்த சின்னங்கள் ஆண்,பெண் பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதில் பெண் கதாபாத்திரத்திற்கு பிளேஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது பந்து வீச்சாளர்கள் பண்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண் கதாபாத்திரத்திற்கு டோங்க் என பெயரிடப்பட்டுள்ளது. இது பேட்ஸ்மேன்களின் பண்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஆட்டத்தின்போது டிஜிட்டல் தளங்களின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story