உலக கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து அணியை பந்தாடியது இந்தியா


தினத்தந்தி 29 Oct 2023 2:57 PM IST (Updated: 29 Oct 2023 9:28 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 230 ரன்களை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.

லக்னோ,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

Live Updates

  • 29 Oct 2023 3:11 PM IST



  • 29 Oct 2023 3:09 PM IST

    இந்திய அணி 15 ஓவர்கள் நிலவரப்படி 3 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களுடனும் கே.எல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 29 Oct 2023 3:03 PM IST

    இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. சுப்மான் கில் (9 ரன்கள்), விரட் கோலி (0), ஸ்ரேயாஸ் ஐயர் ( 4) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்


Next Story