இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியபின் ரோகித் சர்மா கூறியது என்ன?


இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியபின் ரோகித் சர்மா கூறியது என்ன?
x

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியது.

ஜார்ஜ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் ஜார்ஜ்டவுனில் நேற்று இரவு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. பிரிட்ஜ்டவுனில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோத உள்ளது.

இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியபின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 145 முதல் 150 ரன்கள் எடுப்போம் என நினைத்தோம். ஆனால், சூர்ய குமார், ஹர்திக் இடையேயான பாட்னர்ஷிப்பிற்குபின் கூடுதலாக 25 ரன்கள் சேர்க்கலாம் என நினைத்தோம். இலக்கை என் மனதுக்குள் நினைக்கொள்ளலாம். ஆனால், நான் அதை பற்றி யாருக்கும் தெரியப்படுத்த விரும்பவில்லை. வீரர்கள் அனைவரும் உள்ளுணர்வு மூலம் விளையாடுபவர்கள். இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் மிகவும் நல்ல ஸ்கோர்.

அக்சர், குல்தீப் சிறந்த ஸ்பின்னர்கள். சில ஷாட்டுகளை ஆடுவது கடினம், பந்துவீச்சாளர்களுக்கும் அழுத்தம் இருந்தது. ஆனால், அந்த அழுத்தத்தை அவர்கள் சிறப்பாக கையாண்டனர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடினால் நமக்கு ஏற்ற முடிவுகள் அமையும். இந்த ஆட்டத்தை சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. குழுவாக நாங்கள் கடினமாக உழைத்தோம். அனைவரின் கடின உழைப்பால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றோம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் நன்றாக ஆடினோம்.


Next Story