2வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை நீக்கியது சரியான முடிவு என்று நினைக்கிறன் - கே.எல்.ராகுல் விளக்கம்


2வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை நீக்கியது சரியான முடிவு என்று நினைக்கிறன் - கே.எல்.ராகுல் விளக்கம்
x

குல்தீப் யாதவ் 2வது போட்டியில் அணியில் இடம் பெறாதது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ,

மும்பை ,

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே அக்ஷர் பட்டேல், உனத்கட், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஷ்வின், ஸ்ரேயஸ் அய்யர் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியை வெற்றி பெறச் செய்தனட். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது

இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பெறவில்லை. முதல் டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஒட்டுமொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கிலும் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் சேர்த்து உதவினார். முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் அணியில் இடம் பெறவில்லை .அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனாட்கட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குல்தீப் யாதவ் 2வது போட்டியில் இடம் பெறாதது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ,

விக்கெட்டுகளைப் பார்த்தால் தெரியும் , வேகப்பந்து வீச்சாளர்களும் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், அவர்களுக்கு நிறைய உதவிகள் இருந்தன .இங்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம். இந்த மைதானம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.அதனால்தான் சமபலம் வாய்ந்த அணியை நாங்கள் தேர்வு செய்தோம். அதனால் இது சரியான முடிவு என்று நினைக்கிறன்..என தெரிவித்தார்.


Next Story