தோனி, கோலி ஆகியோர் ஆன்லைன் கேமிங் விளம்பரங்களில் நடிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி


தோனி, கோலி ஆகியோர் ஆன்லைன் கேமிங் விளம்பரங்களில் நடிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
x

Image Courtesy: PTI 

தனி நபர்கள் விளம்பரத்தில் நடிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

போபால்,

நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலி விளம்பரங்களில் நடிக்க தடை கோரிய பொதுநல வழக்கை மத்தியபிரதேச ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

இது வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில் "ஷாருக்கான் , தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்தவொரு விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்று தடை விதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஏனெனில் பணம் சம்பாதிப்பது அவர்களின் தொழில்" என தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறார்கள் என்று கூறி வினோத் குமார் திவேதி என்ற வழக்கறிஞர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Next Story