இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம் ?


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்  நியமனம் ?
x

Image : BCCI 

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது

புதுடெல்லி,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க மே 13 முதல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது . இதில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story