தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 165 ரன்னில் ஆல்-அவுட்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 165 ரன்னில் ஆல்-அவுட்
x

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

லண்டன்,

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 73 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் (8 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) தாக்குப்பிடிக்கவில்லை. தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரபடா 5 விக்கெட்டும், அன்ரிச் நோர்டியா 3 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. 63 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து, 45 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. கேப்டன் டீன் எல்கர் 47 ரன்னிலும், சாரெல் எர்வீ 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


Next Story