அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானின் மரியாதையை குறைக்காதீர்கள் - வாசிம் ஜாபர்


அந்த வார்த்தையை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானின் மரியாதையை குறைக்காதீர்கள் - வாசிம் ஜாபர்
x

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

மும்பை,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்திருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலியா அணி தற்போது மிகப்பெரிய தடுமாற்றத்தை கண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உண்டு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை 'அப்செட்' என்ற வார்த்தையை பயன்படுத்தி ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். அதாவது கிரிக்கெட்டில் பெரிய பலம் வாய்ந்த அணியை யாருமே எதிர்பாராத ஒரு சிறிய அணி வீழ்த்தி விட்டால் அதனை 'அப்செட்' என்று அழைப்பர்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசீம் ஜாபர், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில்,

"ஆப்கானிஸ்தான் அணியின் இந்த மாபெரும் வெற்றியை அப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்களுடைய மரியாதையை குறைக்காதீர்கள். ஆப்கானிஸ்தான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள எந்த அணியையும் வீழ்த்தும் தன்மையை உடையது. அவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா போன்ற ஒரு சிறந்த அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த வெற்றியை அனைவரும் கொண்டாட வேண்டுமே தவிர அப்செட் என்று கூறக்கூடாது. ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story