ஜெய்ஸ்வால் உடன் பேட்டிங் செய்வது மிகவும் சிறப்பானது - சுப்மன் கில்


ஜெய்ஸ்வால் உடன் பேட்டிங் செய்வது மிகவும் சிறப்பானது - சுப்மன் கில்
x

Image Courtesy: AFP 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

பல்லகெலே,

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 214 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியில் இலங்கை அணி வலுவாக இருந்த பொழுது நாங்கள் எந்த இடத்திலும் பீதி அடையவில்லை. எங்களுக்கு மேற்கொண்டு ஒரு விக்கெட் மட்டும்தான் தேவை என்பது தெரியும். அதேபோல் ஜெய்ஸ்வால் உடன் பேட்டிங் செய்வது மிகவும் சிறப்பானது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்து விளையாடுகிறோம்.

எங்களுடைய ஸ்டைல் வித்தியாசமானது. அதே சமயத்தில் எங்களுடைய திட்டம் எளிமையானது. நாங்கள் கண்டிஷனை புரிந்து கொண்டு அதற்கேற்ற படி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கிறோம். மேலும் நாங்கள் இன்னிங்ஸை ஆரம்பிக்கும் பொழுது ஆடுகளும் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றபடி விளையாடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story