மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி


மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி
x

Image Tweeted By @ICC 

மலேசிய அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

சில்ஹெட்,

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மலேசியா - வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் எடுத்தது.

முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா ஆகியோர் அரை சதம் அடித்தனர். மலேசியா அணி தரப்பில் சாஷா ஆஸ்மி, மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், வினிஃப்ரெட் துரைசிங்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி களமிறங்கியது.

வங்காள தேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மலேசிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது. இதனால் வங்காள தேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்களாதேச அணி தரப்பில் பரிகா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story