ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் வங்காளதேச அணி வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் வங்காளதேச அணி வெற்றி
x

வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றிபெற்றது.

ஹராரே,

வங்காளதேச அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ராசா 62 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 56 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன.


Next Story