இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வங்காளதேச வேகப்பந்துவீச்சாளர் விலகல்


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வங்காளதேச வேகப்பந்துவீச்சாளர் விலகல்
x

வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, தொடர் முதுகுவலி காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

டாக்கா,

வங்காளதேசம் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது.

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, தொடர் முதுகுவலி காரணமாக விலகியுள்ளார். காயம் சரியாகாததால், அவர் விலகியுள்ளதாக வங்காளதேச அணி தேர்வுக்குழு தலைவர் மின்ஹாசுல் அபேடின் தெரிவித்துள்ளார்.

காயம் சரியான பிறகு எஞ்சிய போட்டிகள் அவர் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story