ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 4-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 4-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x

image courtesy: BCCI Women twitter

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கைப்பற்றியது.

மும்பை,

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2-வது அரைசதம் அடித்த எலிஸ் பெர்ரி 72 ரன்கள் (42 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்களே சேர்க்க முடிந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன், ரிச்சா கோஷ் 40 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தும் பலன் இல்லை. 7 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story