டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா


டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா
x

Image Courtesy: @ICC

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெல்போர்ன்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்கள் அணி விவரங்களை அறிவித்துவிட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பெயரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் ரிசர்வ் வீரர்களாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க், மேத் ஷார்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்; மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

ரிசர்வ் வீரர்கள்; ஜேக் ப்ரேசர் மெக்கர்க், மேத் ஷார்ட்.



Next Story