கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஸ்வின்


கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஸ்வின்
x

அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் நேற்று நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.


Next Story