5வது டி20 போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்


5வது டி20 போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர முனைப்பு காட்டும், அதே வேளையில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.



Next Story