தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
x

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளூக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

லண்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியும்., இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை இந்த போட்டி தீர்மானிக்க உள்ளதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story