2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு


2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: AFP

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

நாட்டிங்காம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story