இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு


இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story