2வது டெஸ்ட் : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி


2வது டெஸ்ட் : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
x

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 151 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோ (49 ரன்), ஜாக் கிராவ்லி (38 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் போக்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு உயர்த்தினர்.

தனது 12-வது சதத்தை எட்டிய பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களில் (163 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். பென் போக்ஸ் தனது 2-வது சதத்தை அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 106.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. போக்ஸ் 113 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்துள்ளது. இன்று, 3-வது நாள்ஆட்டம் நடைபெற்றது.

டீல் எல்கர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் சரேல் எர்வீ 25 ரன்களில் வெளியேறினார்.பின்னர் மார்க்ரம் 6 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த கீகன் பீட்டர்சன் ,ரசி வெண்டர் டசன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.நிலைத்து நின்று ஆடியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

ரசி வெண்டர் டசன் 41 ரன்கள் எடுத்து வெளிறினார்,தொடர்ந்து கீகன் பீட்டர்சன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்க அணி 179 ரன்களுக்கு 10 விக்கெட் இழந்து ஆட்டமிழந்தது.இதனால் 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் ,ராபின்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.


Next Story