"உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்" - ரஷிய அதிபர் புதின்


உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள் - ரஷிய அதிபர் புதின்
x

உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று புதின் தெரிவித்தார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார்.

மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.




Next Story