உக்ரைன் போர்: ரஷிய பெண் கைதிகளை குவிக்க அதிபர் புதின் திட்டம்


உக்ரைன் போர்: ரஷிய பெண் கைதிகளை குவிக்க அதிபர் புதின் திட்டம்
x

ரஷிய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் தாக்குதலில் ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டமிட்ட தகவல் வெளிவந்து உள்ளது.



மாஸ்கோ,

ரஷிய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் தாக்குதலில் ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டமிட்ட தகவல் வெளிவந்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரவில்லை.

ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். இவர், பணத்திற்காக எந்த நாட்டிற்காக வேண்டுமென்றாலும் கூலிப்படையாக செயல்படும் துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இதுதவிர, உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், புதினின் விருப்பத்திற்குரிய சமையல்காரராகவும் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிரிகோஜின், அதிபர் புதின் ரஷியாவில் உள்ள பெண் கைதிகளை துப்பாக்கிகளை சுடும் வீராங்கனைகளாகவும், எதிரி நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான பாலங்கள், ரெயில்வே தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் பணிக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார் என கூறிய தகவல் தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

இதற்காக ரஷியாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதியை சேர்ந்த, புதினின் நம்பிக்கைக்குரிய மற்றும் அரசியல்வாதியான வியாசெஸ்லாவ் வெக்னர் என்பவர் பிரிகோஜினை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் பிரிகோஜினிடம் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து பெண் கைதிகள் குழு ஒன்று பிரிகோஜினை சந்தித்து உள்ளது. அவர்கள் உக்ரைனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொலைதொடர்பு பணியாளர்களாக வேலை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர் என பிரிகோஜின் கூறியுள்ளார்.

இதற்காக வெக்னருக்கு தனது முழு ஒப்புதலையும் பிரிகோஜின் தெரிவித்து விட்டார். ஆனால், இதனுடன் நில்லாமல், அந்த பெண் கைதிகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தும் நபர்களாகவும் செயல்டுவார்கள்.

போரில் இதுபோன்ற திட்டங்கள் பரவலாக செயல்படுத்தப்படும் என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். அந்த திசையிலேயே நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

ரஷிய படை வீரர்கள் எண்ணிக்கையை 15 லட்சம் ஆக விரிவுப்படுத்த பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷொய்கு முன்மொழிந்த நிலையில் அதிபர் புதினின் புதிய திட்டம் பற்றிய இந்த தகவல் வெளிவந்து உள்ளது.


Next Story